வருங்காலத்தில் தொழிலும் பொருளாதாரமும் பெரும் அளவில் 90% இணையத்தை மைய படுத்தியே மாற உள்ளது.அதற்கு ஏற்றார் போல மக்களின் மனநிலைகளும் கொஞ்சம் கொஞ்சம் ஆக மாறி வருவதை நம்மால் காண முடிகிறது.ஆகவே இணைய வழி தொழில் முறைகளை கற்று கொள்வது என்பது காலத்தின் தேவையாக உள்ளது .குறிப்பாக அமேசான் ஈபே போன்ற ஆன்லைன் மார்க்கெட் களின் ஷேர்களும் பயன்பாடுகள் நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சியை எட்டி கொண்டிருக்கிறது .
இந்த இணைய வழி தொழில்கள் நம்மை வாழ்நாள் வேலைகாரனாக இருப்பதில் இருந்து சுயமாக பிஸினெஸ் செய்ய பெரிதும் உதவ கூடியதாக உள்ளது . இருந்த இடத்தில இருந்து கொண்டே நம்மால் உலகில் எங்கிருந்தும் பொருளை வாங்க முடியும் விற்க முடியும் என்பது நம் காலத்தின் தொழில் புரட்சியே.
இருந்த போதும் ஆன்லைன் தொழில் சம்பந்த பட்ட விவரங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மே இருப்பது நம் தமிழ் சமூகம் இந்த வாய்ப்பை பயன்படுத்த பெரிதும் தடையாக உள்ளது .ஆகவே தான் இந்த இணையம் மூலம் அமேசான் பிஸினெஸ் சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களை தமிழில் தர முயற்சி எடுத்துள்ளேன்.
இந்த தளத்தில் அமேசான் தொழில் பற்றி தொடர்ச்சியாக எழுதப்படும் ஆகவே வாசகர்கள் இந்த இணையத்தை தொடர்ந்து பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
அடுத்த பதிவில் அமேசான் பிசினஸ் இன் ஒரு முழு வடிவம் (complete steps) பற்றி எழுத படும்
இவன்
உழைப்பாளி
💪💪💪💪