கல்வி தாக்கம் மாற்றம்

Monday, 5 March 2018

ஏன் இந்த வலைத்தளம் உங்கள் வாழ்கையில் முக்கியத்துவம் பெறுகிறது ???

        வருகைக்கு நன்றி!இந்த தளம் இ-காமெர்ஸ் மூலமாக தொழில் செய்ய நினைபவர்களுக்கு மட்டுமே பயன்படும் ...

இந்த பதிவை நீங்கள் ஏன் படிக்க வேண்டும் ??

20 ஆண்டுகால பள்ளி படிப்பு , படித்த பின் 40 ஆண்டுகால வேலை என்று எழுத படாத ஓர் விதியின்படி நமது ஒவ்வொருவரின் வாழ்கையும்  நகர்ந்து கொண்டிருகிறது. வாழ்கையில் பணம் சம்பாதிப்பது, பின்பு சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து ஓய்வு பெற்ற பின்பு கடைசி கால வாழ்கையை அனுபவிப்பது என்று ஒரு குழந்தை தனமான நம்பிக்கையை முதலாளித்துவம் நமது மூலையில் ஆழமாக பதிய வைத்துள்ளது. பொருளாதார அடிமையாக நம்மை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.



நமக்கு பிடிக்காத வேலையை பிடிவாதமாக வேறு வழியின்றி செய்து கொண்டிருக்கும் என்னை போன்ற பல்வேறு தோழர்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு தூண்டுதலே இந்த தளம்.நமது நேரமும் இளமையும் இன்னொருவரிடம் அடமானம் வைக்கும் வாழ்க்கை போக்கு நம் தலைமுறையோடு தொலைது போகட்டும். குடும்பத்தோடும், சமூகத்தோடும் நமது வாழ்கையை ரசித்து ருசித்து வாழ பொருளாதார விடுதலையே வழி.

நான் படித்த மற்றும் புரிந்து கொண்ட தொழில் நுணுகங்களை( Business strategies) உங்களோடு பகிர்ந்து கொள்வதின் மூலம் உங்களின் வளர்ச்சியில் எனது சிறிய பங்களிப்பை செய்ய விரும்புகிறேன்.மாறாக நானும் உங்களை போன்று தொழில் செய்ய போராடும் ஒரு சராசரி இளைஞ்சனே . நமது இலட்சிய வாழ்க்கை விரைவில் கைகூடும் என்ற நம்பிக்கையில்   மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம் .


உங்கள் நண்பன் 

💪💪💪உழைப்பாளி